திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம்

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம், ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.232, விலை ரூ.300. தேவாரம், திருவாசகத்தை விரும்பிப் படிக்கும் பலரும் திருமந்திரத்தைப் படிப்பதில்லை. ஏனெனில் அதன் பொருள் எளிதில் விளங்காது என்று அவர்கள் கருதுவதாலேயே. அவர்கள் அவ்வாறு கருதுவது ஒருவகையில் சரியானதே. பெரும்பாலான திருமந்திர உரைகள் கற்பதற்கு கடினமாகவே உள்ளன. அக்குறையைப் போக்கியிருக்கிறது இந்நூல். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திரத்தின் (மூலம் உரைசெய்த மூவாயிரம் தமிழ்) ஒன்பது உட்பிரிவுகளிலிருந்தும் (தந்திரங்கள்) முக்கியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிய நடையில் உரையும் வழங்கியுள்ளார் இந்நூலாசிரியர். உயரிய […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்,  ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.160. “பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு “ஐயோ” என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்” என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு எல்லாரும் சமம் என்ற அடிப்படையில் இராமானுஜர் வாழ்ந்ததை, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களின் துணைகொண்டு நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இராமானுஜரின் இளம்பருவம், அவர் […]

Read more