மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்)

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்), இடைமருதூர் கி.மஞ்சுளா, செம்மூதாய் பதிப்பகம், பக்.232, விலைரூ.100. பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் வாசிக்கப்பட்ட, இலக்கிய இதழ்களில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சேரமான் பெருமாள் நாயனாரின் "திருக்கயிலாய ஞான உலா' தமிழின் முதல் உலா என்றும் ஞான உலா என்றும் கருதப்படுகிறது. இது, வயதுக்கேற்ப ஏழு பிரிவினராக பிரிக்கப்பட்ட பெண்கள், சிவபெருமான் உலா வருவதைப் பார்த்து, கொள்ளும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நூலாசிரியர் இந்த உலாவில் கூறப்படும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார். உயிர்கள் எல்லாம் […]

Read more

நிம்மதி

நிம்மதி, இடைமருதூர் கி. மஞ்சுளா, கலைஞன் பதிப்பகம், பக். 168, விலை 180ரூ. இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மலேசியாவில் வெளியிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 22 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஓடும் ரயிலில், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது, பேருந்தில், ஆட்டோவில், மருத்துவமனையில், நெடுந்தூர ரயில் பயணத்தில்… ஏன், கனவில் கூட தன்னைச் சுற்றி நிகழ்ந்த – நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாக்கியுள்ளார் நூலாசிரியர். தற்கால இளைஞர்களின் சுயநலப் போக்கை “சூளை’ சிறுகதை படம் பிடித்துக் காட்டுகிறது. “நிம்மதி’ […]

Read more