கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி

கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி, ஈழவாணி, பூவரசி பதிப்பகம், விலை: ரூ.250. கானவி, கண்ணன், நுவன், குழந்தை யாழி, ஆச்சி, லட்சுமி என்று மிகச் சில கதாபாத்திரங்களை வைத்து அற்புதமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது. நிகழ்கால நிஜமும் கடந்த கால வரலாறும் கேள்விகளாகவும் வேதனைகளாகவும் பதிவாகியிருக்கின்றன. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருத்தலத்தில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடங்கும் கதை, மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று லட்சுமியைப் பார்த்துவிட்டுக் குழந்தையுடன் கானவி திரும்புவதுடன் முடிகிறது. இடையில் புலிகளின் தகவல் தொடர்புப் பிரிவில் […]

Read more

கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி

கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி,  ஈழவாணி, பூவரசி வெளியீடு, விலை: ரூ.250. அதிகாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் இனத்துக்காகவும் எங்கே போர்கள் நடந்தாலும் அவை பெண்களின் உடல் மீதும் உள்ளத்தின் மீதுமே நடத்தப்படுகின்றன. எல்லாச் சபைகளிலும் பெண்ணே பகடைக்காயாக உருட்டப்படுகிறாள். அவிழ்த்து விடப்பட்ட கூந்தலை அள்ளி முடிக்க நம் பாஞ்சாலிகளுக்கு இன்னும் வாய்க்கவில்லை. விரித்த கூந்தலோடு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் பெண்ணாக கானவி என்பவள் இருந்தாலும் அதை அவள் எப்படி அணுகுகிறாள் என்பதை நாவல் வழியே உணர்த்துகிறார் ஈழவாணி. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030124.html இந்தப் […]

Read more