எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி, எம்.எஸ்.எம்.அனஸ், மாற்றுப் பிரதிகள், பக். 184, விலை 120ரூ. ஜமாலுத்தீன் ஆப்கானி வடமேற்கு ஈரானில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைத்தொழில் புரட்சி நடந்து தொழில்கள் வளர்ந்த பின், உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முனைந்தன. அவற்றின் ஆதிக்கத்துக்குட்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளை எதிர்த்தனர். அப்படி எதிர்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் எதிர்த்தனர். இது இஸ்லாமிய சமயத்திலிருந்த பழமைவாதிகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது. […]

Read more