பட்டக்காடு

பட்டக்காடு, அமல்ராஜ் பிரான்சிஸ், எழுத்துப் பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.599. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் அமல்ராஜ் பிரான்சிஸின் முதல் நாவல் ‘பட்டக்காடு’. ஈழப் போரின் இறுதிக் காலகட்ட அனுபவங்களை மையமாக வைத்து அவர் ‘தினக்குரல்’ பத்திரிகையில் எழுதிய தொடர்தான் இப்போது நாவலாக உருமாறியிருக்கிறது. வன்னிக்கு வெளியே இருந்து போரை எதிர்கொண்ட தமிழர்களின் கதையாக இந்நாவல் விரிகிறது. அதாவது, வன்னியில் நடக்கும் சாவுகளைக் கண்டு பயந்து வாழ்பவர்களின் கதை. நன்றி: இந்து தமிழ், 7/09/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வல்லபி

வல்லபி, தேன்மொழி தாஸ், எழுத்துப் பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.200 தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் […]

Read more