கவிதை மரபும் தொல்காப்பியமும்

கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150. “மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, […]

Read more