நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்,  சரசுவதி வேணுகோபால்,மணிவாசகர் பதிப்பகம்,  பக்.159,  விலைரூ.125.  நாட்டுப்புற இலக்கியம் பற்றிய நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலவும் வெளிவந்துள்ளன. அவ்வரிசையில், நாட்டுப்புற இலக்கியக் கூறுகளான வாய்மொழிப் பாடல்கள், கூத்து, ஆட்டம், விளையாட்டு, பழமொழி, விடுகதைகள், கதைப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், மக்கள் வாழ்வியல், பண்பாடு முதலியவற்றை சாறு பிழிந்து தந்திருக்கும் இந்நூல், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட, சில மாத, நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நாட்டுப்புறவியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய நூலாசிரியை, நாட்டுப்புறவியலின் போக்குகள், அணுகுமுறைகள், கோட்பாடுகள், […]

Read more