பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து
பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து, சாந்தகுமாரி சிவகடாட்சம்,சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக்.298, விலை ரூ.350. சுவிட்சர்லாந்து சென்றுவிட்ட வந்த ஒருவர் நம்மிடம் பேசுவதைப் போல, தனது சுவிட்சர்லாந்து பயண அனுபவத்தை இந்நூலில் நூலாசிரியர் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற பல இடங்களை நமக்குச் சுற்றிக்காட்டுகிறார். ஆல்ப்ஸ் மலைகளில் ஒன்றான மிக உயரமான (3,454 மீட்டர்) ஜீங்புருமலை, 4 கி.மீ.தொலைவு உள்ள இகர் மற்றும் மான்க் மலைகளின் ஊடே உள்ள குகைப்பாதை, ஜெனீவாவில் உள்ள ஜெட் டி யு நீருற்று என பல இடங்களுக்கு நாம் செல்கிறோம். […]
Read more