செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு(தமிழ் பதிப்பு வரலாற்று ஆவணம்) – பதிப்பாசிரியர் கா.அய்யப்பன்; காவ்யா, பக்.626. விலை ரூ.600. ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது வாழ்த்துரை, பதிப்புரை, முன்னுரை, ஆராய்ச்சியுரை போன்றவை இருப்பது சிறப்பு. இவை அனைத்தும் இல்லை என்றாலும், பதிப்புரை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த வகையில், தமிழ் மொழியில் உள்ள செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, இன்னா நாற்பது, ஆசாரக்கோவை, கைந்நிலை முதலிய நூல்களுக்குப் பதிப்புரை, மதிப்புரை, முகவுரை எழுதிய தமிழறிஞர்களின் பதிவுளைத் தொகுத்துரைக்கிறது இந்நூல். கு.சுந்தரமூர்த்தியின் ஆராய்ச்சி முன்னுரையில் […]

Read more