பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி, தமிழில்: சசிகலா பாபு, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. […]

Read more

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

  வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை,  இஸ்மத் சுக்தாய், தமிழில்: சசிகலா பாபு,  எதிர் வெளியீடு, பக்.404, விலை ரூ.400. இஸ்மத் சுக்தாய் 1911இல் உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். உருது மொழியில் அவர் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். பெண்ணியச் சிந்தனைகள் வளராத அக்காலத்திலேயே அவர் சுதந்திரமான கருத்துகளை உடையவராக இருந்திருக்கிறார். அவர் உருதுவில் எழுதிய காகஸி ஹை பைரஹன் என்ற சுயசரிதையின் தமிழ் வடிவம் தான் இந்நூல். வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்தியபோது, அதை மறுத்து பிடிவாதமாக உயர் கல்வி கற்கச் சென்றிருக்கிறார். இஸ்மத் சுக்தாய் தொடக்க […]

Read more