தமிழ்ப் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள்
தமிழ்ப் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள், த.கண்ணன், பல்லவி பதிப்பகம், பக். 206, விலை ரூ.155. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாகியுள்ளது. லக்ஷ்மியின் ‘கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி‘, ராஜம் கிருஷ்ணனின் ‘மலர்கள்‘ வாஸந்தியின் ‘மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்‘, எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ ஸ்டெல்லாபுரூஸின் ‘மாயநதிகள்‘, ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ ஆகிய புதினங்களின் கதாபாத்திரங்கள் எவ்வகையான மனநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நூல் ஆராய்கிறது. மனநோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் – பதற்றம், மனச்சிதைவு, பாலியல் கோளாறுகள், ஆளுமைக் கோளாறுகள் போன்றவை ஏற்படுவதற்கான காரணங்கள் விரிவாக இந்நூலில் […]
Read more