திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மு.வரதராசன்,பாரி நிலையம், பக்426, விலை ரூ200. காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன. காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, பொருந்தாக் காமத்தையோ திருவள்ளுவர் கூறவில்லை என்றும், அன்பின் ஐந்திணை என்று சான்றோர் புகழ்ந்த ஒத்த அன்புடைய காதலரின் வாழ்க்கையையே கூறுகின்றார் என்றும் கூறும் மு.வ., காதலையும் தொண்டையும் ஒப்புமைப்படுத்திக் கூறுமிடம் அருமை. […]

Read more