உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல்

உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல், தமிழ் உதயா, நன்செய் பிரசுரம், விலை 70ரூ. ‘எழுத்துகள் எனக்கு வெறும் எழுதுகோலின் பிரசவம் இல்லை. எல்லா உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட என் ஏக்கங்களை கூர் உடைந்த பேனாக்களால் எழுதித் தீர்க்கிறேன்’ என்று சொல்லும் ஈழத்துக் கவிஞர் தமிழ் உதயாவின் ஐந்தாவது கவிதை நூல். துயர்மிகு வாழ்வின் வலிகளுக்கிடையே சுரக்கும் அன்பை மிகக் குறைந்த சொற்களால் கவிதையாக்கியுள்ளார். சிறகு செய்வோம் நாம் முடித்து பிரிந்து போகையில் அது பறக்க வேண்டுமல்லவா துயரங்களைத் தூக்கிக்கொண்டு -எனும் வரிகளில் கவனிக்க வைக்கிறார் தமிழ் உதயா. […]

Read more