நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? (சிறு கதைகள்)- உமா பார்வதி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.144, விலை ரூ.160. பல்வேறு நாளிதழ்களில், மாத இதழ்களில் வெளியான 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கதைகளும் கதைக் கருவில் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. அம்மாவோடு நாளைக் கழிக்க ஆசைப்படும் பத்து வயது சிறுவன் சஞ்சுவின் ஏக்கம் ஒருபுறம்; ஒரே மகனின் ஏக்கத்தையும், தனிமையையும் போக்க நினைத்தாலும், அலுவலகத்தில் கெடுபிடி, ஆடிட்டிங் என்று நீண்ட தூரம் மின்சார ரயிலில் பயணம் செய்து, மனமும் உடலும் சோர்ந்து […]
Read more