இடம், பொருள், மனிதர்கள்

இடம், பொருள், மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் வெளியீடு, பக்.156, விலை ரூ.130. சிந்தனை வெளிப்பாட்டின் சிறு குறிப்புகளாகத் தொடங்கிய பேஸ்புக் பக்கம் இன்று நீண்ட பதிவுகளுக்கு இடம் கொடுக்கிறது. இந்த மின்னூடகப் பதிவுகள் மீண்டும் அச்சு உருப்பெற்று, புதிய வாசக வட்டத்தைக் கவர்வதும் இப்போது இயல்பாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இது. இருபத்தாறு தலைப்புகளில் மாதவ பூவராக மூர்த்தியின் பேஸ்புக் பதிவுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சிந்தனை வெளிப்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி, ஏறத்தாழ சிறுகதைகள் என்றே குறிப்பிடும் அளவுக்கு சில […]

Read more