இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள்
இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள், மால்கம் ஆதிசேசய்யா; தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், பக்.256, விலை ரூ.250. இன்றைய இந்தியப் பொருளாதாரநிலையின் தன்மையைத் தெரிந்து கொள்ள 1980- களிலும், 1990 -களிலும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் துணைபுரியும் வகையில் இந்நூலில்கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பொருளாதார நிபுணரான நூலாசிரியரின் கருத்துகள் இந்தக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியப் பொருளாதாரம் பற்றிய கட்டுரையில் “காந்தியைப் பொறுத்தவரை […]
Read more