முத்தொள்ளாயிரம் உரை வரலாறு
முத்தொள்ளாயிரம் உரை வரலாறு (1943-2018); நூலாசிரியர்:அ.செல்வராசு; காவ்யா, பக்.96; விலை ரூ.100. மூவேந்தர் குறித்த பாடல்களைக் கொண்டது முத்தொள்ளாயிரம். 2,700 பாடல்களில், கிடைக்கப்பெற்ற பாடல்கள் 130 மட்டுமே. இவற்றுள்ளும் சில கருத்து வேறுபாடுகள், பாட வேறுபாடுகள் உண்டு. 1943-இல் டி.கே.சிதம்பரநாத முதலியார் முதன்முதலில் எழுதிய உரையில் தொடங்கி, 2018 -வரை மொத்தம் 17 பேரின் உரைகளில் அவர்களால் பின்பற்றப்பட்டுள்ள இலக்கண – இலக்கியக் கூறுகளை முத்தொள்ளாயிரம் உரை நூல் விரித்துரைக்கிறது. முதன் முதலாக (1905) ரா.இராகவையங்காரால்தான் முத்தொள்ளாயிரம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. "புறத்திரட்டு என்ற ஏடுகளில் இருந்த […]
Read more