வண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம்
வண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம், மேலும் சிவசு; மேலும் வெளியீட்டகம், பக்.240; விலை ரூ.240. ஆண்களும் பெண்களும் அவரவர்களுடைய பலங்களோடும், பலவீனங்களோடும் வலம் வரும் வண்ண நிலவனின் 15 சிறுகதைகளின் வாசிப்பனுபவ தொகுப்பு இந்த நூல். வாழ்ந்து சரிகிற குடும்பம், புலம் பெயர்கிற சூழலில், குடும்பத்தை நிர்வகிக்கும் புருஷனுடன் வாழாத சித்தி எடுக்கும் துணிச்சலான, அதிர்ச்சியான முடிவுதான் எஸ்தர் சிறுகதை. பூர்வீக பூமியை விட்டுப் பிரிவது லேசுப்பட்ட காரியமா? கனகச்சிதத்துடன் வரையப்பட்ட பெண்ணோவியமாக எஸ்தரைப் படைத்துள்ளார் வண்ணநிலவன் என்றால் அது மிகையல்ல. வாழ்ந்து கெட்டவன், […]
Read more