ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்

ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்,  சுப.உதயகுமாரன், வல்லமை, பக்.95, விலை ரூ.90. சமூகத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? வீடுதான் மனித வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. அனைத்து வீடுகளையும் சேர்த்துதான் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புகிறோம். அன்பையும், அறத்தையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் இடங்களாக வீட்டை மாற்ற வேண்டும். அப்போதுதான் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இன்றைய வீடு எப்படி இருக்கிறது? வீட்டில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள, […]

Read more