வல்லினம் பரிசுக் கதைகள்

வல்லினம் பரிசுக் கதைகள், வல்லினம் பதிப்பகம், விலை: ரூ.130 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பத்திரிகை ‘வல்லினம்’, கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தும் சிறுகதைப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இவை. குடும்ப அமைப்புகள், அதிகாரத் திணிப்புகளால் சிறைபட்டுக் கிடக்கும் வாழ்வைச் சுதந்திரமாக்க விரும்பும் மனிதர்கள் கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள். மலேசிய தமிழ் இலக்கியத்தின் புதிய முகங்கள் அந்த மண்ணிலிருந்து எதைப் பதிவுசெய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவுகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

மா.சண்முகசிவா சிறுகதைகள்

மா.சண்முகசிவா சிறுகதைகள், தொகுப்பு ம.நவீன், வல்லினம் பதிப்பகம், விலை 100ரூ. மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலையும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். நெருக்கடிகளையெல்லாம் கடந்து, மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை அளிக்கிறது. உடல் […]

Read more