பெளத்தத்தின் மூவர் நெறி

பெளத்தத்தின் மூவர் நெறி,  வெ.வேதவல்லி, பூம்புகார் பதிப்பகம்,  பக்.508, விலை ரூ.390. ஆசிய ஜோதியாக விளங்கிய புத்த பெருமானையும், அசோக சக்கரவர்த்தியையும் , மணிமேகலையையும் அணிசேர்க்கும்விதமாக எளிய நடையில் ஆசிரியரால் இயற்றப்பட்டுள்ள நூல் இது. பெளத்த மதத்தின் கொள்கைகளையும், போதனைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தபெருமானின் அருள் சிறப்பும், அசோகரின் வரலாற்றுப் பெருமைகளும், மணிமேகலையின் தூய வாழ்க்கைச் சிறப்பும் நயமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கதைநாயகனும், அருள் நெறியருமான புத்தபெருமானின் வாழ்க்கையில் தொடங்கி, அவர்தம் அறநெறி கருத்துகளையும், கொள்கைகளையும் எளிய நடையில் விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். […]

Read more