தமிழில் சுயசரித்திரங்கள்
தமிழில் சுயசரித்திரங்கள் ; ஆசிரியர் : சா. கந்தசாமி, வெளியீடு: சாகித்ய அகடமி, விலை ரூ. 290/-
தமிழில் வெளிவந்த, 12 அறிஞர்களின் சுயசரிதங்களை ஆராய்ந்து அழகுடன் தொகுத்துள்ள நுால். காவியம், புராணம் எல்லாம் கனவில் மிதக்க வைக்கும். கதைகளில், இனிப்பான உண்மை இருக்கும்; சுயசரிதங்களில், கசக்கும் உண்மை இருக்கும். அவற்றை படிப்பதால், வெற்றி, தோல்வி கடந்த அனுபவமே மனதில் தங்கும். ஜெர்மனியில் கொடுங்கோலன் ஹிட்லர், மகள் ஆனிபிராங்குக்கு ஒரு டயரி பரிசளித்தார். அது, அவரது சுயசரிதை. டச்சு மொழியில் வெளிவந்து, பல கசக்கும் உண்மைகளை சொன்னது.
தமிழில், 300 ஆண்டாக சுயசரிதைகள் வெளிவருகின்றன. புதுச்சேரி, ஆனந்தரங்கம் பிள்ளை எழுதியது தான், இந்தியாவில் முதலாவது சுயசரிதை நுால் என்ற தகவல் வியப்புக்குரியது. இவர், 1736 முதல், 25 ஆண்டுகள் நாட்குறிப்பை பதிவு செய்துள்ளார். அது, வரலாற்றின் சாட்சியாக உள்ளது.சுயவரலாற்றுப் பதிவின் முக்கியத்துவத்தை கூறும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029561_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818