தடம் மாறும் வயது
தடம் மாறும் வயது, ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.120.
பெண் – ஆண் உறவு நிலை ஒழுக்கநெறிகளை 30 அத்தியாயங்களில் வலியுறுத்தும் நுால். ஆண்கள் மத்தியில் பெண்கள் சமமாக இருக்கும் நிலையில், இரு பாலினத்தாரும் அடக்கி ஆள முற்படுவர். இந்நிலையில், ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, இருவரும் படைப்பில் சமம் என்றாகிறது.
அன்பு, பொறுமை, பக்குவம், கவனம், நிதானம், விவேகம், நேர்மை இவற்றின் மொத்த வடிவம் தான் ஒழுக்கம். அதை முழுமையாக வசப்படுத்தி வாழ்வதை வாழ்க்கை என்றும், அதற்கான வழிமுறைகளை உணர்த்துகிற நிலையில் குடும்ப உறவைப் பேண பயன்படும் நுால்.
– வடிவேலன்
நன்றி: தினமலர், 20/2/22
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818