தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்
தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக்.200, விலை ரூ.190.
தமிழகத்தின் நீராதாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நூலின் முதல் கட்டுரையான தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி கட்டுரையிலேயே நீராதாரத்தைப் பெருக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, மழைக்காலங்களில் ஆறுகளிலிருந்து வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைப் பயன்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது, நதிகளை இணைப்பது என பலவழிகள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையின் விரிவாகவே இந்நூலின் பிறகட்டுரைகள் அமைந்துள்ளன. கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, முல்லைப் பெரியாறு பிரச்னை என பல நீராதாரப் பிரச்னைகளைப் பற்றி விரிவாகப் பேசும் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.
1977 ஆம் ஆண்டு நவம்பர் 11 இல் வீசிய புயல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் தொடங்கி, தஞ்சைமாவட்டங்களின் பலபகுதிகளைத் தாக்கி கடுமையான பாதிப்புகளை எற்படுத்தியது. அவற்றால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றியவெள்ளமும் புயலும்; கட்டுரை, சமீபத்தில் தஞ்சை, நாகை மாவட்டங்களைத் தாக்கிய புயலை நினைவுபடுத்துவதாக உள்ளது.
2012 – ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர்க் கொள்கை, நாட்டின் அனைத்து நீர்நிலைகளையும், நிலத்தடி நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், நீர் வினியோகத்தையும் நீர்ப் பாதுகாப்பையும் அரசின் பொறுப்பிலிருந்து தனியாருக்குத் தாரை ;வார்த்துவிட மறைமுகமான திட்டமே; மக்களின் அடிப்படை உயிர் ஆதாரமான தண்ணீர், கொக்கோ கோலா, பெப்சி, யுனிலிவர், மக்கின்சே போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்துக்குச் சென்றுவிடும் ஆபத்துக்கு அது வழிவகுக்கும் என்று ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரைகள் அடங்கிய சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 4/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818