தேசமே உயிர்த்து எழு!
தேசமே உயிர்த்து எழு!, டாக்டர் க. கிருஷ்ணசாமி, கிழக்கு பதிப்பகம், பக்: 216, விலை ரூ. 250.
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கண்டிக்கும் “இந்தியா ஒன்றியமா?’ கட்டுரையில் தொடங்கி, “நேதாஜியின் மர்ம மரணம்’, “சாதி ஒழிப்பு நாடகம்’, “திராவிட பேரினவாதம்’, “வன்னிய இட ஒதுக்கீடு’, “மாறாத அமெரிக்கா’, “புதிய கல்விக் கொள்கை’, “எழுவர் விடுதலை’, “காலத்துக்குப் பொருந்தாத சாதிப்பட்டியல்’ உள்ளிட்ட 39 தலைப்புகளில் உள்ளாட்சி நிகழ்வுகளிலிருந்து உலக நாடுகளின் நடப்பு வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
1968-இல் கீழவெண்மணியில் தேவேந்திர குல வேளாளர்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைக்கப்பட்டு தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மண்ணுரிமையை, மனித உரிமையை, வாழ்வுரிமையை மீட்பதற்கான வரலாற்றுப் போராட்டத்தால் நிகழ்ந்த கொடுமை. அதனை சிலர் வெறும் கூலி உயர்வுப் போராட்டமாக சித்தரித்துவிட்டனர் என்கிறார் (“கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள்!’).
“சட்ட மேலவை வேண்டாம்’, “சமூக வலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் வேண்டும்’, “திரைத்துறை திருத்தச் சட்டம் 2021 கொண்டுவரப்பட்டது சரியே’, “நீட் தேர்வை எதிர்ப்பது தவறு’, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் அடுத்த ஆண்டுக்குள் நூறு மரங்களை நட வேண்டும்’ எனப் பல்வேறு கருத்துகளை தரவுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 11/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958382_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818