உபநிஷதச் சிந்தனைகள்
உபநிஷதச் சிந்தனைகள் – (ஐதரேயம், ப்ரச்னம், ப்ருஹதாரண்யகம், சாந்தோக்யம்) -சங்கரரின் சிந்தனைகளைத் தழுவியது- பகுதி-3; தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; சி.பி.ஆர். பப்ளிகேஷன்ஸ்,
நூற்று எட்டில் தசோபநிஷத் என்று பத்து உபநிஷத்துகள்தாம் ஆசார்யர்களால் பாஷ்யம் எழுதப்பட்டிருக்கின்றன. உபநிஷதச் சிந்தனைகள் மூன்றாம் பாகமான இந்நூலில் ரிக் வேதத்திலிருந்து ஐதரேயமும், அதர்வணத்திலிருந்து ப்ரச்னமும், சுக்ல யஜுரிலிருந்து ப்ரஹதாரண்யகமும், சாம வேதத்திலிருந்து சாந்தோக்கியமும் இடம்பெற்றுள்ளன. இந்த உபநிஷதங்களில் உள்ள மந்திரங்களின் விளக்கத்தை சிந்தனைகள் என்று நூலாசிரியர்கள் தொகுத்து வழங்கியிருப்பது தனிச்சிறப்பு. முதலிரண்டு நூல்களில் ஏனைய ஆறு உபநிஷதச் சிந்தனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாந்தி மந்திரமாகிய அஸதோ மா சத்கமயவிற்கு பொருள் எழுதி விளக்கியதோடு மட்டுமல்லாமல், அஜாதசத்ரு என்ற காசிராஜனுக்கும் பாலாகிக்கும் நடந்த அஹம் ப்ரம்மாஸ்மி என்ற இந்த உபநிஷத்ததின் மகா வாக்கிய உரையாடலுக்குப் பிறகு ஸ்ரீஅருணகிரிநாதரின் கந்தரனுபூதியிலிருந்து, ஆனா வமுதே! அயில்வே லரசே! பாடலை உதாரணப்படுத்தியிருப்பது மிகவும் அற்புதம்.
யாக்ஞவல்கியர்-மைத்ரேயி சம்வாதம் எளிமையான தமிழில் விளக்கப்படுகிறது.
சாந்தோக்கியத்தில் உயிரினங்களில் மூன்றின் வெளிப்பாடு உணவின் மாறுபாடே மனம், தண்ணீரின் மாறுபாடே பிராணன், அக்னியின் மாறுபாடே வாக்கு என்று விளக்கி பின்னர் தத்வமஸி என்னும் இந்த உபநிஷதத்தின் மகாவாக்கியம் விளக்கப்படுகிறது. உத்தாலகருக்கும் சுவேதகேதுவுக்கும் நடைபெறும் சம்பாஷணையை யான் எனதற்றிடு போதம், யானறிதற் கருள்வாயே என்று ஸ்ரீஅருணகிரிநாதரின் திருப்புகழ் மேற்கோளோடு சொல்லமுற்பட்டிருப்பது மிகவும் புதிதாக இருக்கிறது.
இந்த உபநிஷதச் சிந்தனைகளை ஆதிசங்கரரின் பாஷ்யங்களிலிருந்து தமிழில் பாமரருக்கும் புரியும்படியாக எழுதிய கே. எஸ். சந்திரசேகரன் மற்றும் வி.மோகன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.”,
நன்றி: தினமணி, 6/5/2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818