உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து,
உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து, இரா.திருநாவுக்கரசு; இரண்டு பாகங்கள்; குமரன் பதிப்பகம், ஒவ்வொரு பாகமும் பக்.168, விலை ரூ.150.
தினமணி இளைஞர்மணியில் தொடராக வெளிவந்த 52 கட்டுரைகளின் நூல் வடிவம். ஒருவர் தன்னையறிந்தால், தன் திறமைகளை, ஆற்றலை அறிந்தால் வாழ்வில் உயர முடியும். மனிதன் உடம்பால் ஆனவன். அவனுக்கு மனம் இருக்கிறது. எண்ணங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன.
வாழ்வில் முன்னேற திட்டமிட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டும். கட்டுபாட்டோடு இருக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும். அன்போடு இருக்க வேண்டும். நன்றி மறக்கக் கூடாது. விசுவாசம் முக்கியம். பெரியோர்களின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.
தன்னலம் இருக்கக் கூடாது. இரக்கமுடையவராக இருக்க வேண்டும். மகிழ்ச்சி முக்கியம். பிறரைப் பாராட்ட வேண்டும். ஆணவம் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் இருந்தாலும் வாழ்வில் முன்னேற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். தன் குறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். தலைமைப்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கூட்டு முயற்சி, குழு வேலை முறை களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் வாழ்வில் உயர முடியும் என்பதை விளக்கும் கட்டுரைகள். கதைகளின் மூலமாக, நிகழ்வுகளின் மூலமாக, உலகின் சிறந்த நூல்களில் காணக் கிடைக்கும் கருத்துகளின் மூலமாக நூலாசிரியர் தான் சொல்ல வந்த கருத்துகளைச் சுவையாகச் சொல்லியிருப்பது நூலின் சிறப்பு.
நன்றி: தினமணி, 3/2/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818