வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள்

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள், தொகுப்பும் மொழியாக்கமும்: கே.நல்லதம்பி, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200.

கன்னடத்தில் வெளிவந்த 12 சமகாலச் சிறுகதைகளின் தொகுப்பு. உலகமயச் சூழலில் வாழ்க்கைமுறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை கலை இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன.

அமெரிக்காவின் நேவடா மாநிலத்தில் பரத்தமைத் தொழில், நவீனத் தொழில்களுக்குரிய நிர்வாக உத்திகளுடன் நடைபெறுவதைச் சொல்கிறது தொழில் சிறுகதை. போனதலைமுறையில் குடும்பத்தில் தந்தை ஆழமாக உள்ளோடும் அன்போடும், இறுகிய வெளித்தோற்ற முகத்துடனும் அதிகாரம் செலுத்தியதைச் சித்திரிக்கிறது சிரத்தை சிறுகதை.

அளவுக்கதிகமான காம உணர்வுடைய ஒருவருக்கு உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உணர்வு – உடல் ஆகியவற்றின் இடைவெளியை மனநலமருத்துவரின் மூலம் தெரிந்து கொண்ட அவர் இறந்து போகிறார், அதீத காமம் சிறுகதையில். 21 வயதில் இறந்து போகும் அதிக நீளமாக மூக்கு வளர்ந்த ஒருவனை அவனுடைய தந்தை காட்சிப் பொருளாக்கிப் பணம் சம்பாதித்தைச் சொல்கிறது மூக்கன் சிறுகதை.

இவ்வாறு இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் சமகால வாழ்வின் வித்தியாசமான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றன. சிறந்த தொகுப்பு.

நன்றி: தினமணி, 15/10/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *