வீழ்வேன் என்று நினைத்தாயோ?
வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பப்ளிகேஷன், பக்.128, விலை ரூ.100.
பத்திரிகையாளர், விமர்சகர், இலக்கியவாதி என பன்முகத் தன்மை கொண்ட மாலன் "தினமணிகதிரில் தொடராக எழுதியபோதே பெருவாரியான வாசகர்களால் மிகவும் ;நேசித்து வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது
லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற மாலன் சிங்கப்பூரில் தங்கியிருந்து இந்தநூலை எழுதியதாக நூலின் முகப்புரையில் குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு என்பது இதயத்திலிருந்து எழுத்து வழியாகவே வெளிப்பட்டிருப்பதை நூல் வெளிப்படுத்துகிறது/
நூலில் இடம் பெற்ற 20 கட்டுரைகளும், தலைப்பு முதல் நிறைவுப் பகுதி வரை படிப்போரை பரவசப்படுத்தும் வகையில் விறுவிறுப்பு, சுவாரஸ்யம், தெளிவுபடுத்துதல் என சிறந்த சிறுகதைகளை வாசிப்பதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.
சிங்கப்பூர் சுதந்திர தேசமானதும்அதன்நிலை காதல் திருமணத்தை அங்கீகரிக்காத தகப்பன் வீட்டை விட்டு வெளியே போ எனத் துரத்தப்பட்ட பிள்ளையின் நிலையைப் போல இருந்ததாக குறிப்பிடுவது சுவாரஸ்யம்.
அண்டை நாடான இந்தோனேசியாவை சிங்கப்பூர் எப்படி சமாளித்தது, அதற்காக உதவிய பிரிட்டன் படைகளை எப்படி நாட்டை விட்டு வெளியேற்றியது என்பதை வரலாற்றைச் சொல்வதைப் போல இல்லாமல், வாசிப்பாளரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பம் நிறைந்த கதையைப் போல கூறியிருப்பது சிறப்பு.
சிங்கப்பூரின் வளர்ச்சி என்பது தலைவர்களின் ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றால் விளைந்தது. அவை நமக்கும் வழிகாட்டுபவையாக உள்ளன.
சிங்கப்பூரின் வரலாற்றை   நாம் வாசிக்கும் போது அந்த நாட்டில் நாம் வாழ்வது போன்ற மனநிலையை ஏற்படுத்தும் வகையில் அனைத்துக் கட்டுரைகளும் அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 29/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027268.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818