வேலுப்பிள்ளை பிரபாகரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் – விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை, வ.உ.சி நூலகம், பக்.1328, விலை ரூ.1500.

‘வெற்றிக்கு விளக்கம் சொல்லக் கூடாது; தோல்வி என்றால் ஏன் தோற்றோம் என சொல்ல ஆளே இருக்கக் கூடாது‘ என்ற பிரபல வாசகத்துக்கு சொந்தக்காரர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
இன்று அவர் குறித்து பல விமரிசனங்கள், விவாதங்கள் – பதிலளிக்க அவர் இல்லை. அப்படிப்பட்ட பிரபாகரனின் வரலாற்று நூலினை இரு பிரிவாக படைத்திருக்கிறார்கள். முற்பகுதி பிரபாகரன் வரலாறு – பிற்பகுதி ஆவணங்கள்.
முற்பகுதியில் அவரின் பிறப்பு – படிப்பு- பிடித்த தலைவர்களான காந்தி, நேரு, பின்னர் நேதாஜி, பகத்சிங், பிடித்த வரலாற்று நூல்கள் – வகுத்துக் கொண்ட கொள்கை – அமைப்பு தொடங்கியது – பயிற்சி பெற்றது – பயிற்சி அளித்தவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியாமை – அமைதிப்படை வருகை – எதிர்த்து சமர் புரிந்தது – ராஜிவ் முடிவு – சக தோழர்களின் எதிரான போக்கு – அவர்களின் முடிவு – முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் என பிரபாகரனின் வாழ்க்கையுடன் அவரது குடும்ப வாழ்க்கையுமாக அரிய தகவல்களைத் தேடித்தேடி -ஆய்ந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள் நூலாசிரியர்கள்.
இரண்டாம் பகுதியான ஆவணங்கள் பகுதியில் விடுதலைப்புலிகள் டெலோ மோதல், முஸ்லிம் மக்களும், தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் ( இந்துப் பத்திரிகையில் வெளிவந்த பிரபாகரனின் முழுப்பேட்டி) கேப்டன் ரஞ்சன், கரும்புலிகளின் பாதை, எனது லட்சியப்பாதை ( பிரபாகரன் எழுதியது) இந்திய இலங்கை ஒப்பந்தம், யாழ் கோட்டையைக் கைப்பற்றியது, அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும், இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்னையும், விடியலுக்கு முந்தைய மரணங்கள் ( விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு) விடுதலைப்புலிகளின் ஆயுதப் போரும் அரசியல் நோக்கும் மற்றும் ஆண்டன் பாலசிங்கம் எழுதிய ‘போரும் சமாதானமும்‘, ‘சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும்‘, ‘அடேல் பாலசிங்கம் எழுதிய ‘பெண்களும் புரட்சியும்‘ உள்ளிட்ட எண்ணிலடங்கா ஆவணங்களும் மாவோ எழுதிய ‘கெரில்லா போர்முறை குறித்த அறிக்கைகள்‘ ‘ புரட்சியாளர் அமில்கார் கப்ரால் ‘தேசிய விடுதலையும் சமூகப்புரட்சியும்‘ ஆவணங்களும் இணைக்கப்பட்ட அரிய நூல் இது.
நூலின் இறுதியில் நூற்றுக்கணக்கில் பிரபாகரனின் சொற்வீச்சுகளும் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் – பிரபாகரன் குறித்த அரிய நூல்களின் பட்டியலில் இந்நூலும் இடம்பெறும்.
நன்றி: தினமணி, 4/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/Velupillai_Prabhakaran.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818