விதுர நீதியும் வள்ளுவ நீதியும்
விதுர நீதியும் வள்ளுவ நீதியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 246, விலை 150ரூ.
விதுர நீதியும் வள்ளுவ நீதியும் என்னும் இந்த நுால், விதுரர், திருதராஷ்டிரருக்கு சொன்ன நீதியையும், திருவள்ளுவர் உலகப் பொதுமறையான தன் திருக்குறளில் உலகத்திற்கு சொன்ன வற்றையும் ஒப்பாய்வு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நுாலில், 50 தலைப்புகளில் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும். செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் என்பது உட்பட பல கருத்துக்கள் பொதிந்துள்ளன. மகாபாரத கதையோடு வள்ளுவரின் குறளை திறன்பட ஒப்பாய்வு செய்துள்ளமை பாராட்டுக்குரியது. இந்த நுால் நாவல் போல் இருந்தாலும் புரிதலை வாசகருக்குத் தந்திருக்கிறது என்பது உண்மை.
– முனைவர் க.சங்கர்
நன்றி: தினமலர், 20/1/2019.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027770.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818