அகம் செய விரும்பு
அகம் செய விரும்பு, நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130.
நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன.
நீங்கள் எந்த வருட மாடல்? இளிச்சவாயர்களாக இருப்போம், யார் உங்கள் பிக் பாஸ், அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள்.
இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன.
நம்மை நாம் அறிந்து கொள்வதற்கும், நமது வலிமையை நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொள்வதற்கும் கிடைக்கும் வாய்ப்பே பிரச்னைகள். தகுதிக்கான வேலையை எதிர்பார்ப்பதைவிட, நாம் விரும்பும் வேலைக்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.மனதிற்கு நாம் யாரென்று தெரியும், ஒருவரின் மனசாட்சியே அவரின் பிக் பாஸ்.
எதிலிருந்தாவது விடுபடுதலே நம்மை நிம்மதியை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பன போன்ற பல அருமையான கருத்துகள் நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதிலும் நிறைந்து தளும்பும் என்பது உறுதி.
நன்றி: தினமணி, 25/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818