அலர்ஜி
அலர்ஜி, கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.140
‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும்.
அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் சொறிந்து முடியாது. இப்படி எத்தனையோ துயரங்கள்.
நம்மை அச்சுறுத்தும் அலர்ஜிகள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் தெளிவடையவும் ஒரு மருத்துவ வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல்.
– சிவசு
நன்றி: தமிழ் இந்து, 23/11/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350255.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818