அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்
அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள், தமிழில்: வி. வி. பாலா, தடம் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100,
லண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கி அதனை இந்தியாவில் விநியோகித்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாவர்க்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார். நாசிக் சதி வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் பெற்ற சாவர்க்கர், அந்தமான் சிறைக்கு மாற்றப்படுகிறார்.
அந்தமான் சிறைக் கைதிகள் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவினர்களுக்கு கடிதம் எழுத முடியும் என்ற கடுமையான விதி அமலில் இருந்தது. அவ்விதிகளுக்குள்பட்டு சாவர்க்கர் எழுதிய ஒன்பது கடிதங்களை இந்நூல் விவரித்துள்ளது.
உலகெங்கும் போர்க் கைதிகளுக்கும் அரசியல் கைதிகளுக்கும் எப்படி பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறதோ அதேபோல் அந்தமான் சிறையில் உள்ள அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தன்னை விடுதலை செய்யாவிட்டாலும், தன்னுடன் இருக்கும் பிற கைதிகளை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதங்களில் அவர் வலியுறுத்துகிறார்.
இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் சுயாட்சி உரிமை கொடுத்தாலும், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்காவிட்டால் அது மக்களிடையே அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும். அரசை எதிர்த்துப்பேசினால் வழக்கு, அரசு சந்தேகப்படாமல் இருக்கும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என விதிமுறைகள் இருப்பது சுல்தான்களின் ஆட்சிக்கு ஒப்பானது என்றும் சாவர்க்கர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கர் ஆங்கில அரசிடம் தனது சுய நலத்துக்காக மன்னிப்பு கேட்டார் என்று பரப்பப்படும் கருத்துகளுக்கு தகுந்த ஆதாரத்துடன் எதிர்வினை ஆற்றியுள்ளது இந்நூல்.
நன்றி: தினமணி, 31/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032269_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818