பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்,சந்தனத் தென்றல் பதிப்பகம், விலை 100ரூ.

பாரதியாரால் பாடப்பட்ட தமிழ்த்தாய், பராசக்தி, பாஞ்சாலி, கண்ணன், குயில், புதுமைப்பெண், பாப்பா ஆகிய ஒவ்வொருவரும் பாரதியைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல்.

இதற்கு முத்தாய்ப்பாகப் பாரதியும் தன்னைப் பற்றி பாடுவதாகப் பாடலை கலைமாமணி கே.பி. அறிவானந்தம் நிறைவு செய்துள்ளார். பாரதியைப் பத்துப்பேர் பாடியதால் ‘பாரதி பத்துப்பாட்டு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாவேந்தர் பாரதிதாசனின் நூல்களான பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற 10 தலைப்புகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் பத்துப் பாடல்கள்.

இதனால் ‘பாரதிதாசன் பதிற்றுப்பத்து’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நூல் பாரதிக்கு ஒரு புகழ் மகுடம்.

நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Leave a Reply

Your email address will not be published.