ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள், செ. கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 254, விலை 150ரூ.

எங்கும், எந்தத் தொழிலிலும் கடும் போட்டி நிலவும் இன்றையச் சூழலில், உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, சர்வதேச அளவில் தங்களது வணிகத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம், சுயதொழில் புரிவோருக்கு உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தின் நுணுக்கங்களை அறிந்து அவற்றைக் கடைபிடிப்பதன் மூலம், சுயதொழில் புரிவோர் சர்வதேசச் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாக்கி கொள்ளலாம்.

இந்நூல், ஏற்றுமதி தொழிலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், தமிழகத்திலிருந்து எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்? இங்கு உற்பத்தி செய்யப்படும் எந்தெந்தப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் அதிகம் தேவை இருக்கிறது? என்பன போன்ற ஏற்றுமதித் தொழிலுக்குத் தேவையான பல்வேறு பயனுள்ள தகவல்கள் நூல் முழுவதும் கொட்டி கிடக்கின்றன.

ஏற்றுமதித் தொழில் என்றால் ஏதோ கார், கணினி மென்பொருள் (சாஃப்ட்வேர்), ஆயத்த ஆடைகள் என கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு சம்பந்தப்பட்ட பெரிய விஷயம் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், அன்றாடம் நாம் உணவுடன் சேர்த்துக் கொள்ளும் ஊறுகாயில் தொடங்கி, அப்பளம், எலுமிச்சை, முட்டை, தேங்காய், மிளகாய் என குறைந்த முதலீடே தேவைப்படும் பொருள்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளனவென்பதை நூலாசிரியர் விவரித்துள்ள விதம் வியப்பளிக்கிறது.

ஏற்றுமதி குறித்த தொழில்முனைவோரின் பல்வேறு சந்தேகங்களும், அவற்றுக்கு நிபுணர்களின் விளக்கங்களும், ஏற்றுமதி தொழில் தொடர்பான புள்ளிவிவரங்களும் ஆங்காங்கே இடம் பெற்றிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.

நன்றி: தினமணி, 5/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *