காந்தியும் பகத் சிங்கும்
காந்தியும் பகத் சிங்கும், வி.என்.தத்தா, தமிழில்: அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக்.160, விலை ரூ.160.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைமன் கமிஷன் வருகையை எதிர்த்துப் போராடிய லாலா லஜபதி ராய் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பழி வாங்கும்விதத்தில் பகத் சிங்கும் நண்பர்களும் சாண்டர்ûஸச் சுட்டுக் கொன்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக 1929 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 -ஆம் தேதி தில்லி மத்திய சட்டசபையில் பகத் சிங், தத் ஆகியோர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். அதனையொட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாண்டர்ûஸ பகத்சிங் சுட்டுக் கொன்ற வழக்கில் பகத் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பகத் சிங்கை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற காந்தி முயற்சி எடுக்கவில்லை என்று ஒரு தரப்பினரும், காப்பாற்ற முயற்சி செய்தார் இன்னொரு தரப்பினரும், நீண்ட காலமாக விவாதம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரின் கருத்துகளையும் அலசி ஆராய்ந்த நூலாசிரியர், “அறநெறி சார்ந்தும், நடைமுறை அடிப்படையிலும் பகத் சிங்கின், அவரது தோழர்களின் செயல்முறையைக் காந்தி கண்டித்தார். அதனால் காந்தி – இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு ஒரு முன் நிபந்தனையாக பகத் சிங்கின் தண்டனைக் குறைப்பை காந்தி முன் வைக்கவில்லை.
பகத் சிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அரசாங்கத்தை வற்புறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார். எந்தவொரு குற்றத்திற்கும் மரணதண்டனை விதிப்பதை ஒழிக்கும்படி கொள்கை அடிப்படையில் ஒருவேளை பிரிட்டிஷாரிடம் காந்தி வேண்டுகோள்விடுத்திருந்தால் பகச் சிங்கின் தூக்குத் தண்டனை மாற்றப்படுவதற்கும், சுதந்திரம் அடைந்ததும் பகத் சிங் விடுதலை செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருந்திருக்கும் என்கிறார் நூலாசிரியர். பகத் சிங்கின் தூக்குத் தண்டனை குறித்த பல்வேறுவிதமான கருத்துகளைச்சிறப்பாகப் பதிவு செய்துள்ள சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 16/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818