குந்தியின் குருசேத்திரம்
குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 275ரூ.
தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவனை பெற்றாலும், வரத்தால் குழந்தை பெற்று, கணவன் இறந்தபோது, தன் சக்களத்தியை, உடன்கட்டை ஏற வைத்து, தன் பிள்ளைகளுக்கு, அரசாளும் உரிமை பெற போராடிய, பெண்ணரசியான குந்தியின் ராஜதந்திரங்களை, இந்நூல் விவரிக்கிறது. கர்ணன் இறந்த பின், அவனை அணைத்து கதறும், அவளின் தாய்மையையும் இந்நூல் சிறப்பாக படம் பிடிக்கிறது.
நன்றி: தினமலர், 16/1/2018