மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள் (அர்தமோனவ்கள்) ,  மக்ஸீம் கார்க்கி,  தமிழில்: நா. தர்மராஜன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 476, விலை ரூ. 450.

ரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி.

உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய “தாய்’ நாவலின் ஆசிரியர்.

கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் “அர்த்தமோனவ்கள்’. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது.

பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் – தலைமுறைகள் – எதிர்காலத்தில் நல்ல முறையில் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் இயல்பானதாகும். ஆனால், காலம் அப்படியெல்லாம் யாரையும் எளிதாக விட்டுவிடுவதில்லை.

ரஷியாவில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடைய வாழ்க்கைக் கதைதான் இது. அந்தக் குடும்பத்தின் எழுச்சியும் அடுத்தடுத்த தலைமுறைகளின் ஆர்வக் குறைவால், திறமையின்மையால் நேரிடும் வீழ்ச்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

திரியோமவ் நகருக்குக் குடியேறி கம்பளி நெசவு ஆலையொன்றைத் தொடங்கும் இல்யா அர்தமோனவ்வின் மகன்கள் பியோத்தர், நிகீதா, அலெக்ஸி ஆகியோரைச் சுற்றி ஏற்படும் காதல்கள், துரோகங்கள், பகைகள் எல்லாமும் அந்தக் கால அரசியல் பின்னணியுடன் சொல்லப்படுகின்றன. நாவலில் நதால்யா மற்றும் நிகீதாவின் பாத்திரங்கள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.

பெரும்பாலான ரஷிய நாவல்களைப் போலவே தலைமுறைகளும் அன்றைய ரஷிய சமுதாயச் சித்திரத்தைத் திறம்பட காட்டுகிறது.

தற்போது அச்சில் இல்லாத, வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய ரஷிய நாவல்களை மீண்டும் பதிப்பித்துக் கொண்டுவரும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

நன்றி: தினமணி, 1/11/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000007357_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.