மூங்கில்கள் புல்லாங்குழல்கள்

மூங்கில்கள் புல்லாங்குழல்கள், இரா. காளீஸ்வரன், மாற்று ஊடகமையம், பக். 80, விலை 60ரூ.

மூங்கில்கள் புல்லாங்குழல்கள் என்ற சிறுகதை தொகுப்பு விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும் 15 சிறுகதைகளைக் கொண்டுள்ளது.

குறிப்பாக கூத்துக் கலைஞர்களின் சாதிய வேறுபாடுகள், பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட பெண், கோயில் திருவிழாக்களில் ஏற்படும் சாதிய சிக்கல்கள், திருநங்கையரின் துயரம், இறக்கும் மனிதர்களை அடக்கம் செய்ய உதவும் மானுட அன்பு, விநாயக சதுர்த்தியின் மத அரசியல், காதலை சொல்லாமல் மரிக்கும் பெண், மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை காப்பாற்றும் தோழர், கைவிடப்பட்ட பெண் குழந்தையைக் காப்பாற்றும் பாலியல் தொழிலாளி, ஏழைக்குழந்தைகளுக்கு சம கல்வி வேண்டும் என வலியுறுத்தும் தோழரின் மகள் என பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு சமூகத்தின் மீதுள்ள கோபத்தையும், எளிய மக்களின் அன்பையும் பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு சிறுகதையும் ஆழமான, செறிவான கருத்தை முன்வைத்து நகர்கிறது. சமூகத்தில் திருநங்கையர் எதிர்கொள்ளும் பிரச்னையை ‘ஷாஜகான் என்ற மும்தாஜ்’ சிறுகதை வாயிலாக நூலாசிரியர் ஆழமாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளார். குறிப்பாக திருநங்கைகள் எதிர்கொள்ளும் சமூகப்புறக்கணிப்பு, பாலியல் சீண்டல்களை கதை வழியே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு விளிம்பு நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வின் பரிமாணங்களையும், சாதியப் பிரச்னைகளையும் விமர்சனப்பூர்வமாக, ஆழமாகப் பேசும் சிறுகதைகள் சிந்திக்க தூண்டுபவையாக உள்ளன.

நன்றி: தினமணி, 20/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *