இயேசுநாதர் வரலாறு
இயேசுநாதர் வரலாறு, அ,லெ. நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 250ரூ.
இயேசுவின் வாழ்க்கையை மிகவும் தெளிவாக எம்மதத்தினரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். அன்பின் மறுவுருவம் இயேசு என தெளிவுபடுத்தியுள்ளார். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை – ஐந்து கால கட்டங்களாகப் பிரித்துள்ளார். இயேசுவின் 33 வருட வாழ்க்கையை பிறப்பு முதல் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளது அருமை.
பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகையைக் குறித்து பழைய ஏற்பாட்டிலே ஏசாயா என்ற தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறுவதை இதில் சரியாக குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். மேலும் இயேசுவின் அற்புதங்களை இதை வாசிப்பவர்கள் வியக்கும் அளவுக்கு எழுதியுள்ளார்.
இயசுவின் பாடுகள் நம் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தேவ குமாரன் இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்து தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இதை வாசித்து பயன்பெறும் அளவுக்கு இருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
நன்றி: தினமணி, 20/6/2016.