நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும்
நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும், மேஜர் மொ.முத்துசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.180.
செய்திக்கு அப்பாற்பட்ட நிலையில் வழக்கு, குறுக்கு விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பதையும் விளக்கும் நுால். குறுக்கு விசாரணை கேள்விகளை வரிசையாகத் தந்துள்ளார். வழக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, அது எந்தத் தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். குற்ற வழக்கு, வாகன விபத்துகளில் எத்தகைய குறுக்கு விசாரணை நடக்கும் என எடுத்துரைக்கிறது.
சாலையில் நடந்து செல்லும்போதே திடீரென ஒரு விபத்தையோ குற்றச்செயலையோ பார்க்க நேரிட்டு, அதன் காரணமாக நீதிமன்றித்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கையேடாக இருக்கும். நன்கு திட்டமிட்டு உருவாக்கியிருப்பதைப் படிப்போர் உணர்ந்து கொள்வர். நீதித்துறையில் நடக்கும் விசாரணைகளை வெளிப்படுத்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 9/1/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818