பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.16\

ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றவர். கற்றறிந்ததை அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ்தவமாக மக்களுக்கு அருளியவர்.
அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது.

வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் கேட்க, ஆம் என்று சொன்னதற்காக முருகப்பெருமானே கடிந்து கொண்டதால் இறுதி வரை பழநி செல்லவில்லை.

அதேநேரத்தில் காணக்கிடைக்காத ஒரு அதிசய இடத்தை, முருகனே அழைத்துச் சென்று காண்பிக்கும் வரம் பெற்ற அதிசய மகான் இவர். எழுத்தும், இறையுமாக வாழ்ந்த மகானின் வரலாற்றை படிப்பது, கந்தனை வணங்குவதற்கு சமம் என்பதை விளக்கியுள்ளார் ஆசிரியர் ரமணன்.

– எம்.எம்.ஜெ.,

நன்றி: தினமலர், 25/10/20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *