பெண்ணாகப் பிறந்தாலே
பெண்ணாகப் பிறந்தாலே, ச.அமுதா, இராசகுணா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130.
இன்றைய நவீன யுகத்திலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வாழ முடியாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி , இந்நிலையை எவ்வாறு மாற்றுவது என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பிறப்பதற்கு உரிமை வேண்டும்#39; என்ற முதல் கட்டுரை ‘பெண் சிசுக்கொலை‘39; நீண்டகாலமாக இருப்பதையும், இன்றும் அது தொடர்வதையும் விவரிக்கிறது.
வளர் இளம் பருவத்தில் பெண்கள் சந்திக்க நேரும் பிரச்னைகள், அவர்கள் மீதான வன்கொடுமைகள், சமுதாயத்தில் பெண்களைக் கீழாக நினைக்கும் மதிப்பீடுகள், மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது, அரசியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாதது என பெண்களின் பிரச்னைகள் அனைத்தையும் இந்நூல் ஆராய்கிறது. பல்வேறு பெண்விடுதலைச் சிந்தனைகளையும் அறிமுகப்படுத்துகிறது.
ஆண்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது பெண்களின் நோக்கமல்ல39, 39 என்று கூறும் நூலாசிரியர், ‘ஒவ்வொரு பெண்ணும் கவுரமாக தற்சார்போடு வாழ்வதற்கு இரண்டு இலட்சியங்களைக் கட்டாயம் அடைய வேண்டும். கல்வி கற்பதும், அதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் அந்த இலட்சியங்கள். வாழ்க்கையில் தன் காலில் நிற்கவும், பிறரைச் சார்ந்து வாழும் சூழலிலிருந்து விடுபடவும், கற்ற கல்வியைப் பயன்படுத்தி ஒரு நிரந்தர வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும்’ 39 என்கிறார்.
பெண்ணடிமைப் பிரச்னைகளுக்கு நூலாசிரியர் வைக்கும் நடைமுறை சார்ந்த தீர்வுகள், பெண்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவுபவையாக இருக்கின்றன.
நன்றி: தினமணி, 2/7/2017.