ரஜினிகாந்த் எனும் காந்தம்
ரஜினிகாந்த் எனும் காந்தம், ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ.
சாதாரண நடிகராகத் திரைப்படத் துறையில் நுழைந்து, குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக, அதே சமயம் எதுவும் விட்டுப்போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரை அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும், ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களுடனும் கொடுத்து இருப்பதால் ரஜினிகாந்த் ரசிகர்களை இந்த நூல் கவரும்.
நன்றி: தினத்தந்தி, 27/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818