சதுர பிரபஞ்சம்
சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ.
புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஐஸ் பெட்டிக்குள் ஒருநாள் பிணமாக உறங்கப் போகிறோம் என்பதற்கான ஒத்திகைதான் இப்போது நாம் அனுபவிக்கும் ஏ.சி. சுகம் என்பதை “குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கி வாழ்வின் கடைசி நிமிடங்களுக்காக ஒத்திகை பார்ப்பது அனிச்சையாகி விட்டது” என்று கோ.வசந்தகுமாரன் அழகுற எடுத்துரைக்கிறார்.
“துக்க வீட்டில் நீ அழும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது ஈவிரக்கமற்ற என் காதல்”, “கடல் பிரிய மனமில்லை. கைக்குட்டையில் நனைத்துக் கொண்டேன்” என்பன போன்ற சுவையான கவிதைகளை நூல் முழுக்கக் காணலாம்.
நன்றி: தினத்தந்தி,19/7/2017.