காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர், பா. செயப்பிரகாசம், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, விலை 180ரூ. அசைபோடும் கதைகள் பா.செ. அவர்களின் காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் முதலில் கவனத்துக்கு வருவது சொற்களில் இருக்கும் கச்சிதம். கத்தி போன்ற சொற்கள். ஆனால் அந்த கத்தி மெல்லிய அங்கத சுவையுடன் கதையை சொல்லிக்கொண்டே வேண்டிய இடத்தில் ஆழமாக கீறவும் செய்கிறது. சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சாதீய சிடுக்குகளையும் அதில் மாட்டிக்கொண்டு கிழிந்து தொங்கும் மனித உறவுகளையும் பெரும்பாலான கதைகளில் காண முடிகிறது. […]
Read more