தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார், இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ.

தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது.

ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது.

தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு தூக்கலாக இல்லை என வ.சுப.மாணிக்கனாரின் ஆதங்கத்தைச் சுட்டிக்காட்டி தற்கால தமிழ் ஆய்வாளர் நிலையை ஆதங்கத்தோடு நூலாசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர்.

சங்க இலக்கியத்தில் அகத்திணை பற்றிய பாடல்கள் அனைத்தையும் ஒரு சேர வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது மாணிக்கனார் மட்டுமே என்பதை அறியும் போது அவரது தமிழ்ப்பணியின் மாண்பை அறியலாம்.

வ.சுப.மாணிக்கனார் குறித்த நூல்களின் பட்டியலுடன், அவர் எழுதத் திட்டமிட்டிருந்த நூல்களின் பட்டியல், அவருடைய பொன்மொழிகள் என தொகுத்திருப்பதும் சிறப்பாகும்.

நன்றி: தினமணி, 27/2/3017.

Leave a Reply

Your email address will not be published.