தினமணியின் தமிழ்ப்பணி
தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர் கு. வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ.
தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது.
தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை விரிவாக இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது.
அன்றாட அரசியல் நிகழ்வுகளைத் தன் நேர்கொண்ட பார்வையால் பார்க்கும் தினமணியின் தலையங்கங்கள், நாட்டுநடப்புகளைக் கூர்ந்து கவனித்துப் பேசும் துணைக்கட்டுரைகள், ஆன்மிக, சோதிட செய்திகளின் களஞ்சியமாக வெளிவரும் வெள்ளி மணி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, சுயமுன்னேற்றக் கட்டுரைகளைத் தாங்கிவரும் இளைஞர் மணி, பெண்கள் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தழுவிவரும் மகளிர் மணி, பல்சுவை மலராக மிளிரும் தினமணி கதிர், பயனுள்ள பலதகவல்கள் அடங்கிய சிறுவர் மணி என தினமணியின் பன்முகத்தன்மையை, சிறப்புகளைப் பறைசாற்றுகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 27/2/2017.