நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை, சித்ரா லட்சுமணன், எழுத்து பிரசுரம், விலை 340ரூ.
தமிழ் சினிமா உலகில், திரைக்குப் பின்னால் நடைபெற்ற காதல், மோதல், துரோகம் போன்ற பலதரப்பட்ட சம்பவங்கள் இந்த நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கின்றன. நடிகர், நடிகைகள் மட்டும் அல்லாது, திரைப்படத்துறை சார்ந்த அத்தனை பிரிவினர் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், இதுவரை அறியப்படாத ஆச்சரியமான செய்திகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன.
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம், பல பிரபலங்கள் போராட்ட வாழ்வுக்குப் பின் திரைப்படத்துறையில் நுழைந்த கதை, சிவாஜி நடிப்பை குறை சொன்ன இயக்குனர் போன்ற வியப்பான பல செய்திகள் சுவாரசியமான முறையில் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினதந்தி, 17/1/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818